அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருடம் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ நேற்று (டிசம்பர் 4) திரையிடப்பட்டது. இதைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு முன்பு குவிந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில், அல்லு அர்ஜூன் சர்ப்ரைஸாக திரையரங்குக்கு எண்ட்ரி கொடுத்தார்.
இதனால் அல்லு அர்ஜூனுடன் செல்ஃபி எடுப்பதற்காக கூட்டம் முண்டியடித்து. இதனால் கூட்ட நெரிசல் எற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி (வயது 39), அவரது மகன் ஸ்ரீ தேஜ் (வயது 9) ஆகியோர் சிக்கி மயக்கமடைந்தனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு, அருகில் உள்ள பெகும்பெட் கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வித்யா உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீ தேஜூக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புஷ்பா படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
Asian Champions Trophy : தாய்லாந்தை ஊதித் தள்ளிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!