புஷ்பா 2 : ராஷ்மிகாவின் கியூட்டான செகண்ட் சிங்கிள் புரோமோ!

Published On:

| By Kavi

2021 ஆம் ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 1 திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

முதல் பாகத்தை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் போஸ் புரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “புஷ்பா புஷ்பா” பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் செகண்ட் சிங்கிள் ஆக ஒரு காதல் பாடல் வரும் மே 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை முன்னிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஒரு ஸ்பெஷல் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகை ராஸ்மிகா மந்தனா படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும் போது, “ஶ்ரீவள்ளி அக்கா, புஷ்பா 2 படத்தோட செகண்ட் சிங்கிள் ரிலீஸ்னு சொல்றாங்க, அந்த பாட்டு என்னன்னு சொல்லுங்க” என்று ஒரு குரல் கேட்க, உடனே அந்தப் பாடலின் முதல் வரியை பாடி காட்டி, ராஷ்மிகா க்யூட்டான எக்ஸ்பிரஷனை கொடுப்பது போல் அந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடி இருக்கும் இந்த பாடலுக்கு “Sooseki – The Couple Song” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த செகண்ட் சிங்கிள் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னட, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து பகத் பாசில், சுனில், அனுஷியா பரத்வாஜ், ஜெகதீஷ் பிரதாப், உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புஷ்பா 1 திரைப்படத்தை விட புஷ்பா 2 திரைப்படம் டபுள் மடங்கு பிரம்மாண்டமாக உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?

டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!

மேதகு ஆளுனருக்கோர் மித்திரக் கடிதம் !

போக்குவரத்து Vs போலீஸ்: முதல்வருக்கு TNSTC தொழிலாளர்கள் கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel