இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான ‘புஷ்பா – 2’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய வியாபாரம் குறித்த தகவல் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகி வரும் ‘புஷ்பா – 2’ திரைப்படம், ரிலீஸுக்கு முன்னரே சுமார் ரூ.900 கோடி ரூபாய் வரை ப்ரீ ரிலீஸ் பிசினஸ் நடைபெற்றிருக்கிறது.
இந்தத் தொகை ஓடிடி, சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்தையும் சேர்த்த பிசினஸாகும். இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளது.
படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளின் வெர்ஷன்களை சுமார் ரூ.270 கோடி ரூபாய் விலைக்கு நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் டிஜிட்டல் உரிமத்தில் மட்டும் அதிகத் தொகைக்கு வியாபாரமான முதல் இந்திய திரைப்படமாக ’புஷ்பா – 2’ உள்ளது. ‘புஷ்பா – 1’ படத்தின் பான் இந்திய வரவேற்பு, வசூல் சாதனையே இத்தகைய வியாபாரத்தை அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உருவாக்கியுள்ளது .
இதுகுறித்த அப்படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை
இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தை விட இந்தப் படத்திற்கான வியாபாரமும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறை வட்டாரங்களிலும் எகிறியுள்ளது.
இந்தப் படம் குறித்த போஸ்டர், சிங்கிள் டீசர் ஆகியவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தத் திரைப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா. ஃபஹத் ஃபாசில், சுனில், அனஷுயா பரத்வாஜ், ஜகதீஷ் பிரதாப், ராவ் ரமேஷ், அஜய் கோஷ், தனஞ்சயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மிரோஸ்லா குபா புரொசேக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவீன் நூலி படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார்.
–ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஏஐ-யிலும் தெற்கு, வடக்கு பிரிவினையா? – பாய்ந்த ஷோஹோ ஸ்ரீதர் வேம்பு
மஹிந்த்ரா SUV க்குள் மயக்கப் போகும் ஏ.ஆர்.ரகுமான்
ரயில் டிக்கெட் புக் பண்றீங்களா… உங்களுக்குத்தான் இந்த அப்டேட்!