தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சுகுமார். இவர் இயக்கத்தில் 2021 டிசம்பர் 17 அன்று ரிலீசான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.தெலுங்கு, தமிழ்,இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகி ப வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் 385 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனை படைத்தது.
புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குக்கிராம தேநீர் கடை வரை எதிரொலித்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இடம்பெற்ற சாமி சாமி, ஸ்ரீவள்ளி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டை கிளப்பின. குறிப்பாக ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் இளைஞர்களை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வர வைத்தது
அதுமட்டுமின்றி சாமி சாமி, ஸ்ரீவள்ளி ஆகிய பாடல்களில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இருவரும்ஆடிய டான்ஸ் ஸ்டெப்களை ரீல்ஸாக பதிவிட்டவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு இப்படத்தின் பாடல்கள் சினிமா ரசிகர்களை சென்றடைந்திருந்தன
இந்நிலையில், புஷ்பா படத்தின் பாடல்கள் இதுவரை இந்திய மொழிகளில் வெளியான எந்தப்படமும் நிகழ்த்தாத சாதனையாக,இந்திய அளவில் 5 பில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்ற முதல் ஆல்பம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
இராமானுஜம்