விஜய் டிவி பிரபலம் புகழ், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 படத்தில் புகழின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் Mr.Zoo Keeper என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் புகழ்.
இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பயன்படுத்தாமல் உண்மையான காட்டு விலங்குகளுடன் புகழ் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை J. சுரேஷ் எழுதி இயக்கியுள்ளார். J4 ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
காட்டில் இருந்து காணாமல் போன ஒரு புலி குட்டியை தேடும் வனத்துறை அதிகாரிகள், அந்த புலி குட்டியை வளர்க்கும் புகழ், அதனால் புகழின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படி புகழ் சமாளித்தார் என்பதே இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் புகழுடன் இணைந்து நடிகர்கள் ஷிரின், சிங்கம் புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி!
மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு!