காதலர் வாரம் நேற்று ரோஜா தினத்துடன் தொடங்கிய நிலையில், இன்று காதலை வெளிப்படுத்தும் தினம் (Propose Day) கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் உங்கள் காதலிக்கோ அல்லது காதலருக்கோ நீங்கள் தனித்துவமான முறையில் அழகாக உங்கள் இதயத்தில் இருந்து காதலை வெளிபடுத்தலாம்.
காதல் சொட்டும் பல காவியங்களை படைத்த நம் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 காதல் வசனங்களை இங்கு பார்க்கலாம்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
”தெனமும் நான் சண்டப்போடுவேன். வெறுப்பேத்துவேன், கோவப்படுவேன், தலையா பிச்சிக்க வேப்பேன். ஆனாலும்.. ஆனாலும் நான் சந்தோசமா இருப்பேன். எனக்கு நீங்க தான் வேணும்”
வாரணம் ஆயிரம்
“ஹாய் மாலினி, ஐ அம் கிருஷ்ணன். நான் இதை சொல்லியே ஆகனும். நீ அவளோ அழகு. இங்க எவனும் இவ்ளோ அழகா…. இவ்ளோ அழக பாத்துருக்க மாட்டாங்க… அண்ட் ஐ எம் லவ் வித் யூ!”
மெட்ராஸ்
”உனக்கு என்ன தான் வேணும்?
என்ன… நீ தான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா?”
காக்க காக்க
“நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கனும். உங்க கூட என் வாழ்க்கைய வாழனும். உங்ககூட நான் இருக்கனும். உங்ககூட சிரிச்சி பேசனும், சண்டப்போடனும். உங்க தோளில் சாஞ்சி அழனும். இன்னிக்கி மாதிரி எப்பவுமே நான் உங்க மேல பைத்தியமா இருக்கனும். இந்த கண்கள நா பாத்துக்கிட்டே இருக்கனும். அப்புறம் ஒருநாள் செத்து போய்ரணும் அவ்ளோ தான்”
ரெமோ
“பார்த்த உடனே தோணுச்சி.. உங்கூட வாழ்ந்தா வாழ்க்க அவ்ளோ அழகா இருக்கும்னு. எனக்கு இதுல சரி தப்புனு எதுவும் தெரில. நீ மட்டும் தான் தெரிற. நீ மட்டும் தான். என்ன ஆனாலும் உன் கைய புடிக்கனும்”
நானும் ரெளடி தான்
“உனக்கு யாரும் இல்லேன்னு எனக்கு தெரியும், இனிமே நான் தான் உன்னை நல்லா பாத்துக்கபோறேன். உங்க அப்பா இருந்தா எப்படியோ அப்படி பாத்துப்பாறோ.. அத விட ஆயிரம் மடங்கு நா உன்ன நல்லா பாத்துபேனு எனக்கு நம்பிக்க இருக்கு… அழுது முடிச்சுடு, நான் இருக்கேன்”
விண்ணைத் தாண்டி வருவாயா
“உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுகளையும் தங்கச்சியா ஏத்துக்குறேன் இனிமே, உன்ன தவிர”
அலைபாயுதே
“நா உன்ன விரும்பல, உன் மேல ஆசை படல, நீ அழகா இருக்கேனு நெனைக்கல ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு.. யோசிச்சு சொல்லு”
இறுதி சுற்று
“மாஸ்டர் நான் நல்லா இருக்கேனா, நான் நல்லா இல்லேயா, மாஸ்டர் பொய் சொல்லாத, உனக்கு என்ன பிடிக்கும், ஐ லவ் யூ மாஸ்டர்”
சச்சின்
இன்னும் ரெண்டு நாள்ல.. இந்த கண்ணு முழுக்க வெக்கத்தோட.. இந்த கண்ணம் கிண்ணமெல்லாம் செவக்க.. இவ்ளோ கிட்ட வந்து உன் மூச்சு என் என் மேல பட.. என் கண்ல நீ தெரிய.. ஐ லவ் யூனு நீ சொல்லுவ”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஐந்து பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பதட்டத்தில் தமிழகம்!