‘புராஜெக்ட் கே’ : பிரபாஸின் முதல் பார்வை!

Published On:

| By Kavi

Project K Prabhas First Look

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘புராஜெக்ட் கே‘ படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் பிரபாஸின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.

புராஜெக்ட் கே திரைப்படத்தில் அமிதாபச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட சர்வதேச அளவில் பிரபலமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

அதனாலேயே இந்த திரைப்படம் சர்வதேச சினிமாவில் முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கபடும் அறிவியல் புனைவு கதை திரைப்படமான ‘புராஜெக்ட் கே’ செஃபியா டோன் காட்சி பின்னணியில் கதையின் நாயகனான பிரபாஸ் ஒரு புதிரான தோற்றத்தில் இருப்பது போன்ற போஸ்டர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

பாகுபலி படத்தின் மூலம் அகில இந்திய நட்சத்திர அந்தஸ்தை பெற்ற பிரபாஸ் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தொடர்ந்து வெற்றியை பெற தவறினாலும் மினிமம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை எட்டிவிடுகிறது.

பிரபாஸ் நடிப்பில்  ஏற்கனவே வெளியான ஆதி புரூஷ் படத்தின் டிரைலர், அதனை தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் விமர்சகர்களாலும், சமூகவலைதளங்களிலும் கிண்டல் செய்யப்பட்டது.

தற்போது ‘புராஜெக் கே’ படத்தில் இடம்பெறும் பிரபாஸின் தோற்றத்தை முதல்முறையாக படக்குழு வெளியிட்டுள்ள நிலையில்,  ‘மோசமான ஃபோட்டோஷாப், தலையும் உடலும் சரியாக பொருந்தவில்லை’ என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனின் முதல் தோற்றப் பார்வை வெளியானது.  அந்த தோற்றத்துக்கு பெரிய விளம்பரம் செய்த நிலையில் மிகச் சுமாரான தோற்றமாக அது வெளியானது, தற்போது பிரபாஸின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

பெரும் பில்டப் கொடுக்கப்பட்டு தட்டையான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் போஸ்டர் வெளியாகியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மணிப்பூர் கொடூரம்: முக்கிய குற்றவாளி கைது!

மணிப்பூர் சம்பவம்: எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share