கடந்த மாதம் சமூக வலைதளங்கள் முழுவதும் அதிகமாக பேசப்பட்டது இவர்கள் திருமணம்தான். காரணம், இவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து கொண்டார்களா என்று கேட்டால், அதுதான் இல்லை.
குண்டாக உள்ள ஒருவரை இவ்வளவு அழகான பெண் எப்படி திருமணம் செய்துகொண்டார் என்பதுதான் விவாதப் பொருளாக மாறியது.
அந்த ஜோடி வேறு யாரும் இல்லை, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிதான்.
நடிகை மகாலெட்சுமியை திருமணம் செய்த சமயத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசியுள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் மியூசிக் சேனலில் அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் மகாலட்சுமி.
ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான ’வாணி ராணி’ சீரியல் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக இருந்தது.
ரவீந்திரன் லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவலை முதலில் யாரும் நம்பவில்லை.
அதிக பருமனாக இருக்கும் அவரை மகாலட்சுமி பணத்துக்காக திருமணம் செய்துகொண்டதாக சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது.
ஆனால் இந்த திருமணம் காதல் திருமணம் என்றும், ’மகாலட்சுமி பணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணினதாக சொல்றாங்க..
பணத்துக்காக பண்ணிருந்தாங்கன்னா என்னைவிட எத்தனையோ பேரு நல்லா இருக்காங்களே.
அவங்களை விட்டுவிட்டு என்னை எதுக்கு பண்ணணும்’ என ரவீந்தர் தனியார் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் மூலம் விளக்கமளித்து இருந்தார்.
இந்தநிலையில், விஜய் டிவி இந்த ஜோடியை வைத்து “வந்தாள் மகாலட்சுமியே” என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர்.
நாளை (அக்டோபர் 2) ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோவில் ரவீந்தரும், மகாலட்சுமியும் தங்களது காதல், அதன் பின்னர் நடந்த திருமணம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.
அதில் பேசிய ரவீந்தர் சந்திரசேகரன் “என்னுடைய திருமணம் சாதாரணமா திருப்பதி போய், நடந்த திருமணம்தான். அந்த திருமண போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் எல்லோரும் பதிவிடுவதுபோல நானும் பதிவிட்டேன். ஆனால் அது நாட்டோட பிரதான பிரச்சனை மாதிரி ஆய்டுச்சு.
நான் மகா குடும்பத்தாரையும் கூப்பிட்டு போய்தான் கல்யாணம் பண்ணேன். இவங்களை மட்டும் தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணல” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சாதாரண இந்து -சனாதன இந்து: வட இந்தியாவை வியக்கவைக்கும் ஆ.ராசா பேச்சு!
`ஓசி’ டிக்கெட் மூதாட்டி மீது வழக்கில்லை : காவல்துறை விளக்கம்!