producer raveendar arrested in chennai

ரூ.16 கோடி மோசடி… பிரபல தயாரிப்பாளர் கைது: பின்னணி என்ன?

சினிமா

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ரூ.16 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர் (வயது 39). சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் நட்புனா என்னானு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். சமீபத்தில் இருவரும் தங்களின் முதலாமாண்டு திருமணநாளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கொண்டாடினர்.

producer raveendar arrested in chennai

இந்த நிலையில் மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், ”கடந்த 2020ஆம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்தத் திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

மேலும் அந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். அதனை நம்பி 16 கோடி ரூபாயை முதலீடு செய்தேன். ஆனால், அவர் கூறியது போல் பவர் ப்ராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமல் ஏமாற்றியதால், கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் அவர்  கொடுத்த பணத்தை திரும்ப தர மறுத்ததும் அல்லாமல், எனக்கு மிரட்டல் விடுத்தார்.  ரவீந்தர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்” என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

ரவீந்தர் கைது!

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி ஆலோசனையின் பேரில் உதவி கமிஷனர் ஜான் விக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. அவர் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தலைமறைவான ரவீந்தரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் தனது மனைவியான நடிகை மகாலட்சுமியை பார்ப்பதற்கு அசோக் நகர் இல்லத்துக்கு வந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று  ரவீந்தரை கைது செய்தனர். அவரது வீட்டிலிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், அவருடைய பாஸ்போர்ட், வங்கி புத்தகம் போன்றவற்றை கைப்பற்றியதுடன், ரவீந்தரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்க்குடிமகன் : விமர்சனம்!

இலவசப் பேருந்து பயணச்சீட்டை இணையதளம் மூலம் பெறுவது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *