இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் ரஜினிக்கு ஒரு கம் பேக் படமாக அமைந்தது. இதன்பிறகு இயக்குனர் நெல்சன் அடுத்து எந்த ஹீரோவோடு இணையப்போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் தனது உதவி இயக்குனருக்காக நெல்சன் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
நெல்சனின் படங்களில் தொடர்ந்து உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிவபாலன். தற்போது சிவபாலன் ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம், அந்த படத்தை நெல்சனே தயாரிக்க உள்ளதாகவும் அந்த படத்தில் ஹீரோவாக கவின் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், நடிகர் எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்ததாக கவின் நடிப்பில் ஸ்டார் படம் வெளியாக உள்ளது. கூடிய விரைவில் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அரையாண்டுத் தேர்வு : புதிய அட்டவணை இதோ!
ஸ்ரீரங்கம் கோயில் சுவர் சிற்பங்கள் சேதம் : என்ன நடந்தது?
மழையில் பாதித்த சிறு, குறு தொழில்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!