ganguva released in 38 languages

கங்குவா: 6 வேடங்கள், 38 மொழிகள், 300 கோடி பட்ஜெட்… முரட்டு சம்பவம் லோடிங்!

சினிமா

சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும், 38 மொழிகளில் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். ganguva released in 38 languages

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான லுக்கை படக்குழு வெளியிட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகிபாபு, கோவை சரளா, ஆனந்த ராஜ், ரெடின் கிங்ஸ்லி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் மற்றும் கங்குவா என மொத்தம் 6 வேடங்களில் சூர்யா நடித்து வருகிறார்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தை 300 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் 38 மொழிகளில் 3D மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக 10 மொழிகளில் கங்குவா வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது. தற்போது 38 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது.

இதுவரை படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு குழு அறிவிக்கவில்லை என்றாலும், 2024 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கங்குவா திரைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ganguva released in 38 languages

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

கார்த்திகை தீப திருவிழா: 2,700 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வையுங்கள்: மன்சூருக்கு பாரதிராஜா அறிவுரை!

ஓட்டுக் கேட்ட ஆளுநர்… சிறுகட்சிகள் கையில் லகான்! க்ளைமேக்ஸை நோக்கி ராஜஸ்தான்

தமிழக மீனவர் கடத்தல்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *