அஜித் நடிக்கும் துணிவு படம் ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு படம் உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக எச். வினோத், அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது.
இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர், இயக்குநர் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், “சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா” ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து துணிவு படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் வெளியிடாமல் படக்குழு டிரெய்லர் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது.
அறிவித்தபடி துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூப் டிரண்டிங்கில் முதல் இடம் பிடித்தது.
துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் ரிலீஸ் தேதியைத் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி துணிவு படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
திரைதுறையினருக்கு அமைச்சர் அளித்த உறுதி!
ஷங்கர் இல்லாமல் நடக்கும் படப்பிடிப்பு: ஏன்?