பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை, தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் இன்று (செப்டம்பர் 1) திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் செய்துள்ள பதிவு பலரையும் ரசிக்க வைத்துள்ளன.
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் ஷாந்தனு நடித்த ‘முருங்கைக்காய் சிப்ஸ்’, கவின் நடித்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
அதோடு சில படங்களை விநியோகமும் செய்திருக்கிறார். சமீபத்தில் சமூக வலைதளமான யூடியுபில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அளித்து வந்த கருத்துகளால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன், பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இன்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
மகாலட்சுமி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
திருப்பதியில் நடந்த இந்த திருமணத்தில் இருவீட்டார் குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ரசிக்க வைத்த ஜோடிகளின் திருமண பதிவு!
திருமண புகைப்படங்களை தனது சமூக வலை தளங்களில் பகிர்ந்துள்ள ரவீந்திரன், “மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க… ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடச்சா…” என குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/Ch9SXCPJ_YN/
அதே போல் மகாலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில், “என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். உங்கள் காதலால் என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இருவரின் பதிவும் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி பின்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அதேபோல் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
விரைவில் வெளியாக இருக்கும் நயன்தாரா திருமண வீடியோ!