திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்மாதம் 29 அன்று செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வெளியாக உள்ளது.
தெலுங்கில் நடித்துவரும் வாத்தி படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து1930-40 காலக்கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
இதற்காக நீண்ட தலைமுடி, தாடி வளர்த்து வருகிறார் தனுஷ்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இருதினங்களுக்கு முன் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது நாயகியாக பிரியங்கா அருள் மோகன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமாகி எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா அருள்மோகன். அடுத்து தனுஷ் உடன் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியானது என்றார்.
இராமானுஜம்
திருச்சிற்றம்பலம் ஓடிடி ரிலீஸ் எப்போது?
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!