இரண்டாவது குழந்தைக்குத் தாயாக இருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் போர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அந்த குழந்தைக்கு மல்டி மேரி என்று பெயர் சூட்டப்பட்டது . இந்த குழந்தை பிறந்ததை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் தம்பதியினர் அவர்களது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.

அதில், வாடகை தாய் மூலமாக எங்கள் குழந்தையை பெற்றதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம், இந்த ஸ்பெஷலான நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இரண்டாவது குழந்தையையும் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி பரவி வருகிறது. மேலும், இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்