பிரபல சினிமா நடிகைகளின் ஆபாச டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச டீப் ஃபேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நடிகைகள் ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோரின் ஆபாச டீப் ஃபேக் வீடியோக்களும் வெளியானது.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரியங்கா சோப்ரா கொடுத்த ஒரு இன்டர்வியூ வீடியோவில் அவரது முகத்தை மாற்றாமல் குரலை மட்டும் டீப் ஃபேக் மூலம் மாற்றி ஒரு போலி நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது போன்றும் அவரது வருமானம் குறித்து தெரிவிப்பது போன்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ சலசலப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
அனிமல் வசூல் வேட்டை… அலறவிடும் ஒருவார கலெக்ஷன்!
நிவாரண நிதி: முதல்வர் கேட்டது எவ்வளவு? பிரதமர் அறிவித்தது எவ்வளவு?