நடிகை பிரியாமணி இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதற்காக அவரை மனதளவில் பலரும் காயப்படுத்தி வருகின்றனர். அதன் உச்சக்கட்டமாக உனது குழந்தை வேறு விதமாக மாறப் போகிறது என்று விமர்சித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை பிரியாமணி முஷ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஈத் பண்டிகை கொண்டாட்டம் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பிரியாமணி பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். உங்கள் திருமண வாழ்கையால், பிறக்கும் குழந்தை தீவிரவாதியாக கூட மாறி விடுமென்றும் கமெண்ட் பதிவிட்டிருந்தனர்.
இத்தகைய பதிவுகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் பிரியாமணி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து பிரியாமணி கூறுகையில், “பலரும் என்னை இரக்கமே இல்லாமல் கண்டபடி கேள்வி எழுப்பி டார்ச்சர் செய்கின்றனர்.
பல செலிபிரட்டிகள் தங்கள் ஜாதி , மதங்களை கடந்து திருமணம் செய்துள்ளனர். ஆனால், அந்த மதத்தை தழுவாமல் தங்கள் மதத்தையே பின்பற்றி வருகின்றனர். நானும் மதத்தை பார்க்காமல் காதலில் விழுந்தேன். ஏன் இவ்வளவு வெறுப்புணர்வு என்று தெரியவில்லை.நான் திருமணத்துக்கு முன்பே அவரிடம் சொல்லி விட்டேன், எனது இந்து மதத்தை நான் தொடர்ந்து பின்பற்றுவேன். மதம் மாறமாட்டேன் என்றும் கூறி விட்டேன். நான் இந்துவாக பிறந்தேன். என் மத நம்பிக்கைப்படிதான் வாழ்வேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழா தொடங்கியவுடன் அது குறித்து வீடியோக்கள் ,புகைப்படங்களை சமூகவலைத் தளங்களில் ஏன் பதிவிடவில்லை என்று கேட்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மெரினா உயிரிழப்பு: விமானப் படை, போலீஸ் இடையே கம்யூனிகேஷன் இல்லை… ஈஸ்வரன் குற்றச்சாட்டு!