மாஸ் ஆக்சன் படமாக வெளியாகும் ‘கடுவா’!

மலையாள நடிகரான பிரித்விராஜின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவரது மனைவி சுப்ரியா மேனன் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கடுவா’.

இந்தப் படத்தில் பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், விஜயராகவன், கலாபவன் ஷாஜன், திலீப் போத்தன், அஜு வர்கீஸ், சுதேவ் நாயர், சாய்குமார், அர்ஜுன் அசோகன், சீமா மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் ஜூலை 7ஆம் தேதி இந்தப் படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது.

இதை முன்னிட்டு நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பிரித்விராஜ்.

அப்போது, “மலையாள திரையுலகில் தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த ‘கடுவா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தப் படம் தொடங்கப்பட்டாலும் கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்பு என பலவிதமான இடர்பாடுகளை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இது இருக்கும்” என்றார்.

இந்தப் படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய வாழ்க்கையை தழுவி எழுதப்பட்ட திரைக்கதையாகும். பிரித்விராஜ் முதல்முறையாக இயக்கிய ‘லூசிபர்’ படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் இந்த படத்தில் மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பத்து வருடங்கள் கழித்து இயக்குநர் ஷாஜி கைலாஷும், பிரித்விராஜும் இணைந்து உருவாகியுள்ள படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘கடுவா’ திரைப்படம்.

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts