நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு கோட் திரைப்பட அப்டேட்டுகளை பகிர்ந்து படக்குழு ட்ரீட் கொடுத்தது.
விஜய் பிறந்தநாளான நேற்று (ஜூன் 22) கோட் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி வெளியிடப்பட்டது. டபுள் ஆக்ஷனில் விஜய் பைக் ஓட்டும் அந்த காட்சி ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவின் மறைந்த சகோதரி பவதாரிணியின் ஏஐ குரலில் உருவாக்கப்பட்ட சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியானது. விஜய், பவதாரிணி பாடியுள்ள இந்த மெலோடி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், கோட் படத்தில் நடித்துள்ள நடிகர் பிரேம்ஜி அவரது சகோதரரும் படத்தின் இயக்குனருமான வெங்கட் பிரபுவுடன் பைக்கில் பயணிப்பது போன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல, நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை த்ரிஷா அவருடன் எடுத்த செல்ஃபியை பகிர்ந்துள்ளார். லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை த்ரிஷா தற்போது பகிர்ந்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் அவதூறு… டிஜிபிக்கு நோட்டீஸ்!
நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!