மலர் டீச்சர் கேரக்டரில் சாய் பல்லவிக்கு பதில் முதலில் வேறு ஒரு நடிகையை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்ததாக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
நிவின் பாலி நஸ்ரியா நடிப்பில் ‘நேரம்’ படத்தை கொடுத்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், கடந்த 2015-ம் வருடம் சாய் பல்லவி , நிவின் பாலி நடிப்பில் ‘பிரேமம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
மலையாளத்தில் வெளியான இந்த படம் அந்த மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெற்றி அடைந்தது.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மலர் டீச்சர் கதாப்பாத்திரம் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இந்தநிலையில் அந்த கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை தேர்வு செய்ய திட்டமிட்டிருந்ததாக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
குமுதம் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “மலர் டீச்சர் கதாபாத்திரத்துக்கு முதலில் அசினை நடிக்க வைக்கதான் முடிவு செய்திருந்தேன். அவரிடம் நிவின் பாலி பேசுவதாக சொல்லியிருந்தார். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.
முதலில் மட்டஞ்சேரியைச் சேர்ந்தவராக இந்த கதாபாத்திரத்தை எழுதியிருந்தேன். பிறகு அந்த கதாபாத்திரத்தை தமிழகத்தைச் சேர்ந்தவராக மாற்றியதால் சாய் பல்லவியை தேர்வு செய்தோம். கோவையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று ஆடிசன் செய்தோம்.
அதுபோன்றுதான் அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோரை தேர்வு செய்தோம்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசின் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் சாய் பல்லவி தான் பொருத்தமானவர் என்றும் ரசிகர்கள் அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கழிவுகளை எரிக்கும்போது பலி : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலம் !
தேசிய கல்விக் கொள்கை மீளாய்வுச் சந்திப்பு!.
பெருங்கடல் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல்!
புதுச்சேரி சாராயம்… 11 பேர் மருத்துவமனையில் அனுமதி! : டீன் விளக்கம்!