ரோமியோ பிக்சர்ஸுடனான தற்போதைய படத்திற்குப் பிறகு, அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைவேன் என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேரம்’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அல்போன்ஸ் புத்திரன் அறிமுகமானார்.
பின்னர் இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது.
‘பிரேமம்’ படத்துக்குப் பின்னர் மலையாளத்தில் பிருத்விராஜ் – நயன்தாரா நடித்த ‘கோல்டு’ என்கிற படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் அவருடைய அடுத்த பட அப்டேட்டை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(ஏப்ரல் 20) வெளியிட்டுள்ள பதிவில், “மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவை அண்மையில் சந்தித்தேன்.
இம்முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் இணைந்து நான் பணியாற்றும் தற்போதைய படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜாவுடன் இணைந்து அடுத்த படத்தில் பணியாற்றுவேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பல்வீர் சிங் வழக்கு: சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்!
ஓபிஎஸ் பற்றி பேசினால் நேரம் வீண்: ஈபிஎஸ்