மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

சினிமா

திரையரங்குகளில் படங்கள் வெளியாகும் போது கிடைக்கும் வரவேற்பு தற்போது ஓடிடி ரிலீசிலும் கிடைக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ஓடிடியில் வெளியாகும் படங்கள், காட்சிகள் குறித்து விரிவாக அலசி ஆராய்கின்றனர்.

நினைத்த நேரத்தில் படம் பார்க்கும் வசதி, குறைந்த கட்டணத்தில் அதிக படங்கள் போன்ற காரணங்களால், ஓடிடியில் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு, சைரன், லால் சலாம் ஆகிய படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது தெரிய வந்துள்ளது.

மஞ்சுமல் பாய்ஸ் 

குணா குகை + கண்மணி அன்போடு காம்போவால் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த இப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. 2௦௦ கோடிகளுக்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள படம் என்னும் பெருமையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

வெப்பம் குளிர் மழை: விமர்சனம்!

டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் இப்படம் ஏப்ரல் கடைசியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ரிலீஸ்க்கு முன்பு இப்படத்தின் ஓடிடி உரிமை விலை போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமலு

ரொமான்ஸ் + காமெடி ஜானரில் வெளியாகி 2கே கிட்ஸ்களை கவர்ந்த இப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. முதலில் மலையாளத்தில் மட்டும் வெளியாகி அங்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியானது.

வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் பிரேமலு திரைப்படம் வெளியாகிறது.

சைரன்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்றாலும் படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வருகின்ற ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சைரன் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லால் சலாம் 

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் முதலில் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது சன் நெக்ஸ்ட் தளத்தில் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: தொட்டதெல்லாம் தூள் பறக்குது… மீம்ஸ் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்!

GOLD RATE: சரட்டென எகிறிய விலை… அந்த பக்கம் போகாதீங்க!

செந்தில்பாலாஜி போல கேஜ்ரிவால்… -திகார் சிறைக்கு சென்ற டெல்லி முதல்வர்

+1
12
+1
3
+1
4
+1
5
+1
7
+1
13
+1
12