விடாமுயற்சி படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்க, மைத்ரி மூவி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
சமீபத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், நீண்ட நாள் கழித்து நடிகர் அஜித் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிகை தபுவை நடிக்க வைக்க படக் குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல மலையாள நடிகர் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்த ஆண்டு வெளியான மலையாள படமான பிரேமலு கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் மிக பெரிய வெற்றி அடைந்தது. அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் நஸ்லென் தற்போது நடிகர் அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் அஜித்தின் அறிமுக காட்சிக்காக ஒரு தரமான மாஸ் குத்து பாடலை இசையமைத்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தேயிலை மகசூல் அதிகரிப்பு : தோட்டங்களிலேயே தேக்கமடையும் நிலை… காரணம் என்ன?
கால்பந்தில் இருந்து கண்ணீருடன் ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி
ஒரே மையத்தில் நீட் தேர்வு எழுதிய ஆறு பேர் முதலிடம்: மறுதேர்வு நடத்த கோரிக்கை!
–