கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அயோத்தி’. மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் சசிகுமார், புகழ், பிரீத்தி அஸ்ராணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தியேட்டரை விடவும், OTT-யில் இப்படத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்து விட்டனர். வடநாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வருகின்றனர். அந்த குடும்பத்தில் தாய் மரணிக்க, அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சேர்ப்பது தான் படத்தின் கதை.
மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை பேசியது இந்த திரைப்படம். இந்நிலையில் அடுத்தடுத்து இளம் நடிகர்களுடன் பிரீத்தி அஸ்ராணி ஒப்பந்தம் ஆகி உள்ளது தான், கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் கவின். கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்குகிறார். இந்த படத்தில் பிரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருவதாகவும், ஜாலியான திரைப்படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக ரியோ ராஜ் நடிக்கும் திரைப்படத்திலும் பிரீத்தி ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
கடைசியாக ரியோ நடிப்பில் வெளியான ‘ஜோ’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தென் சென்னையில் மறுவாக்குப்பதிவு: தமிழிசை வலியுறுத்தல்!
ஒருவழியாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது!
‘குக் வித் கோமாளி’ ஆரம்ப தேதி வெளியானது… செம குஷியில் ரசிகர்கள்…!