தொடர்ந்து ஆங்கில டைட்டில்: பிரதிப்பீன் புது பாணி!

சினிமா

தமிழில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் ஆணை அமலில் இருந்த போது தமிழ் படங்களுக்கு தேடி தேடி தமிழ் பெயர் சூட்டப்பட்டது.

GST அறிமுகமான பின்பு வரிவிலக்கு ரத்தான பின்பு தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும் ஆர்வம் குறைந்தது. முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு ஆங்கில பெயர்களை வைத்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு தக் லைஃப், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு The Greatest of All Time, வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கவிருக்கும் படத்திற்கு Good Bad Ugly என ஆங்கில பெயர்களே சூட்டப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக அறிமுகமான முதல் படம் தொடங்கி மூன்றாவதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் படம் வரை ஆங்கில பெயர்களாகவே சூட்டப்பட்டு வருகின்றது. ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

அவர் கதை நாயகனாக அறிமுகமான லவ்டுடே முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தவர். அவரிடம் கதாநாயகனாக நடிக்க கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்களும், கதை சொல்ல இயக்குநர்களும் வரிசையில் அணி வகுத்தனர்.

அவர் நடிப்பில் தற்போது எல்.ஐ.சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. எல்.ஐ.சி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாக நடிக்க அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன்னதாக ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். அப்படம் ரிலீஸ் ஆகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது தனது இரண்டாவது படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க உள்ளார்.

இப்படத்திற்கான பெயர் குறித்த அறிவிப்பு நேற்று காலை 9 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்த படக்குழு, பிற்பகல் 2 மணியளவில் அப்படத்திற்கு டிராகன் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் பிரதீப் உடன் மிஷ்கின், யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க உள்ளார். பிரதீப் ரங்கநாதன் இதுவரை ஹீரோவாக நடித்த லவ் டுடே, எல்.ஐ.சி, டிராகன் ஆகிய மூன்று படங்களுக்கும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

– இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிளஸ் 2 தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?

Gold Rate: மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *