ஓ மை கடவுளே என்ற பேண்டஸி லவ் ஸ்டோரி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
படம் மிகப்பெரிய வெற்றியடைய இதன் தெலுங்கு ரீமேக்கான ஒரி தேவுடா (Ori Devuda) படத்தையும் அஸ்வத் மாரிமுத்தே இயக்கினார்.
இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜயின் GOAT படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 26-வது படத்தை தான் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இதில் ஹீரோவாக இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (ஏப்ரல் 10) ஏஜிஎஸ் 26 படம் குறித்து வெளியான அறிவிப்பு வீடியோவில், பிரதீப் ரங்கநாதன் தான் படிக்கும் காலகட்டத்தில் கல்லூரியில் எந்த அளவிற்கு சேட்டைகள் செய்தேன்.
எப்படி சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது, கல்லூரி காலத்தில் தனது சீனியரின் குறும்படத்தில் நடித்த அனுபவம் என பல விஷயங்களை பேசிக்கொண்டே, அந்த கல்லூரி முழுவதும் சுற்றி வருவார்.
மேலும் தற்போது அந்த சீனியரும் நானும் இணைந்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போகிறோம்.
கல்லூரியில் சீனியரின் குறும்படத்தில் தான் நடித்த அந்த காட்சியை மீண்டும் ரீ கிரியேட் செய்து இந்த அறிவிப்பு வீடியோவை வெளியிட விரும்புகிறேன் என்று, கூறிவிட்டு ஸ்டைலாக பிரதீப் ரங்கநாதன் நிற்கிறார்.
தற்போது உள்ள பிரதீப் ரங்கநாதன் புகைப்படமும் அப்போது அவர் கல்லூரி காலகட்டத்தில் அதேபோல் போஸ் கொடுத்த புகைப்படமும், ஒன்றாக திரையில் தோன்றி நாஸ்டால்ஜியா மொமண்டை உருவாக்கும் விதமாக இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
வீடியோவின் இறுதியில் தான் பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி சீனியர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து என தெரிய வருகிறது.
ஒரு புதுவிதமான கோணத்தில் செம ஜாலியான வசனங்களுடன் வெளியாகி இருக்கும் ஏஜிஎஸ் 26 படத்தின் அறிவிப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக ஏஜிஎஸ்-பிரதீப் ரங்கநாதன் கூட்டணி லவ் டுடே படத்திற்காக இணைந்தனர். அப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும் நல்ல லாபத்தை அளித்தது.
தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீது இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்னேஷ் சிவன் வரிகளுக்கு ‘குத்தாட்டம்’ போடும் சந்தானம்
#25YearsOfPadayappa: ரஜினிக்கு ஜோடியாக நக்மா… வில்லியாக மீனா… ‘படையப்பா’ சுவாரஸ்யங்கள்!
சமூகநீதி வேடம் போடும் திமுக: ராமதாஸ் காட்டம்!