இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர் நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா. இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘முசாசி’.
அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
தற்போது இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக பிரபுதேவா உள்ளிட்ட படக் குழுவினர் இலங்கையில் முகாமிட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள முசாசி படக்குழுவினரை கௌரவிக்கும் வகையில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன படக்குழுவினருக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் அழைப்பை ஏற்ற படக்குழுவினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இலங்கை பிரதமருடன் பிரபுதேவாவும் படக்குழுவினரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செந்தில் பாலாஜி வழக்கு: மத்திய குற்றப் பிரிவு போலிஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்!
இந்த வார டாப் 10 : உங்களுக்கு பிடித்த சீரியல்கள் இருக்கிறதா?