”நாட்டு நாட்டு” ஆட்டம் போட்ட பிரபுதேவா

Published On:

| By Jegadeesh

பிரபுதேவா மற்றும் அவரது நடன குழுவினர் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.

இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்ததும் இந்த படத்தில் இடம் பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இதனிடையே, இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடனம் ஆடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபுதேவா மற்றும் அவரது நடனக்குழுவினர் சுமார் 200 பேருக்கு மேல் ஒரே மாதிரி ஸ்டெப்பில் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/PDdancing/status/1637049948913950720?s=20

இதன்படி, அரவிந்த் என்ற ரசிகர் ”உங்கள் நடனக்குழுவில் உள்ள அனைவரும் அருமையாக நடனம் ஆடுகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் சீனிவாசன் என்ற ரசிகர்” நாட்டு நாட்டு பாடலுக்கு நீங்கள் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நன்றி சார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நெப்போட்டிஸம்: மந்தையின் மனநிலை! – நடிகர் ராம்சரண் பளீர்

ஒரே இரவு மழை: நீரில் மூழ்கிய பிரதமர் திறந்துவைத்த எக்ஸ்பிரஸ் சாலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share