தமன்னாவுக்கு விருந்தளித்து அசத்திய பிரபாஸ்

Published On:

| By Kavi

இந்திய அளவிலான நட்சத்திர நடிகரான பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரபாஸ் சக திரை கலைஞர்களுக்கு எவ்வாறு விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்கள தங்களது பேட்டியில் கூறியிருக்கின்றனர்.

அந்தவகையில் தற்போது தமன்னா கூறுகையில், ”பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது.

அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார்.

காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துகிறது. எளிமையான உதாரணத்துடன் சொல்ல வேண்டும் என்றால், நாட்டை ஆளும் மகாராஜாவிற்கு இணையானவராக பிரபாசை சொல்லலாம்.

அவரின் விருந்தோம்பல், மற்றவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அவருடன் பணியாற்றும் சக நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவர் மீதும் அவர் காட்டும் அக்கறையுடன் கூடிய அரவணைப்பு அலாதியானது.

அவரது இந்த விருந்தோம்பல் பண்பு அவருடன் பணியாற்றும் சூழலை எப்போதும் இதமாக வைத்திருக்கும். ” என கூறியிருக்கிறார்.

இதனிடையே நடிகை தமன்னா மட்டுமல்ல.. நடிகைகள் பூஜா ஹெக்டே, ஸ்ரத்தா கபூர், ஸ்ருதிஹாசன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பிரபாசின் மாயஜால விருந்தோம்பலில் நனைந்து, அவரைப் பற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இராமானுஜம்

ராகுகாலம் பார்த்த முதல்வர்: காதில் பூ வைத்திருந்த எம்.எல்.ஏக்கள்!

Data Story : ஈரோடு கிழக்கு – புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share