ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் வெளியானது பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ டீசர்!

Published On:

| By Jegadeesh

பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசர் இன்று (அக்டோபர் 2) வெளியானது. இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’பாகுபலி’ படத்தின் வீரம் நிறைந்த அரசனாக நடித்த பிரபாஸ், தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக நடித்துள்ளார்.

பிரபாஸின் 22வது படமாக உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார்.

ராமராக நடித்திருக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் சீதையாக நடித்துள்ளார், ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் அயோத்தியில் இன்று மாலை வெளியிடப்பட்டது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆதி புருஷ் படத்தை ரசிகர்களுக்கு இணையாக பிரபாஸும் எதிர்பார்த்திருக்கிறார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிரிக்கெட் பார்க்க வந்த பாம்பு!

சென்னையில் மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share