நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் சலார் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் பிரித்திவிராஜ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தான் இப்படத்திற்கும் இசையமைத்து உள்ளார். சலார் படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு முடிவடைய தாமதமானது. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகாமல் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு 2023 செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும், படம் அதன் இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் படம் என்றாலே ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி ராதே ஷியாம் படம் வெளியானது, ஆனால் இப்படம் பெரிதளவு வெற்றியை அடையவில்லை, இதனால் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இவரது அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மோனிஷா