இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் “சலார்”. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே ஜி எஃப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் என்பதால் பிரபாஸின் மாஸ் ஆக்சன் காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் புரோமோஷனுக்காக எக்ஸ் பக்கத்தில் சலார் படத்தின் எமோஜிகளை படக் குழு வெளியிட்டது.
வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சலார் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சலார் படத்தின் ட்ரெய்லர் இன்று (டிசம்பர் 01) வெளியாகி உள்ளது.
தனது நண்பனுக்காக ( பிரித்விராஜ்) ஒரு மிக பெரிய எதிரி படைகளை எதிர்த்து நிற்கும் தனி ஒருவனாக வருகிறார் தேவா ( பிரபாஸ்). ரத்தம் தெறிக்கும் மாஸான ஆக்சன் காட்சிகள் ட்ரெய்லர் முழுக்க இடம்பெற்று உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் பிரபாஸ் நடிப்பில் மிரட்டுகிறார்.
பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை தன்வசம் ஈர்த்த பிரபாஸ், தற்போது சலார் படத்தின் மாபெரும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது சலார் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியா?: தமிழிசை பதில்!
கோபத்தில் தெறிக்கும் ரத்தம்… விஷால் 34 பட டைட்டில் டீசர் ரிலீஸ்!