பிரபாஸ் அடுத்த படத்தின் டைட்டில் இதோ!

சினிமா

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்த படம் பெரிய அளவில் வசூல் செய்தது. ஆனால் தமிழ், ஹிந்தி போன்ற மற்ற மொழிகளில் எதிர்ப்பார்த்த வரவேற்பும் வசூலும் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால், சலார் 2 படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பதால் சலார் படக்குழு ஓரளவிற்கு ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பிரபாஸின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் மாருதி தசாரி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்திற்கு ‘தி ராஜாசாப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பீபுள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் பிரபாஸ் லுங்கியுடன் செம ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தி ராஜாசாப் படம் அனைவரும் ரசிக்கும் வகையில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வழக்கமாக பிரபாஸ் பெயரின் ஸ்பெல்லிங் ஆங்கிலத்தில் ‘PRABHAS’ என்று தான் இடம்பெறும். ஆனால் தி ராஜாசாப் பட போஸ்டரில் கூடுதலாக ஒரு “எஸ்” இணைந்து ‘PRABHASS’ என்று இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக பிரபாஸ் படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் நியூமராலஜி காரணத்திற்காக தனது பெயரை பிரபாஸ் மாற்றிக் கொண்டார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இதுகுறித்து பிரபாஸ் தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது பிரபாஸ் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ‘தி ராஜாசாப்’ படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மீண்டும் முதல் பரிசு நோக்கி முன்னேறும் சாம்பியன்!

ஆளுநர் முதல் அண்ணாமலை வரை: அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்து!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *