சலார் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டில் பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய படம் சலார். எப்போது வெளியாகும் என பான் இந்திய நடிகரான பிரபாஸின் ரசிகர்கள் காத்திருந்தனர். செப்டம்பர் 28ஆம் தேதி சலார் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
ஆனால் அறிவித்தபடி வெளியாகாமல் பட ரிலீஸ் தள்ளி போகிறது.
சலார் பட தயாரிப்பு நிறுவனமான, ஹோம்பலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சலார் படத்துக்கு ரசிகர்கள் அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். எதிர்பாராத சூழ்நிலைகளால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசாக வேண்டிய படம் தள்ளிப்போகிறது.
முழுமையான சினிமா அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதனால் வேறு வழியின்றி சலார் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம் சலார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்த நிலையில், படக்குழுவின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பல பிரபலங்கள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
“பாஜக அரசை ஒழிக்க கவனம் செலுத்துவோம்” – உதயநிதி
வேலைவாய்ப்பு : ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு!