பிரபாஸின் கல்கி 2898 AD ரிலீஸ் தேதி எப்போது?

Published On:

| By christopher

Prabhas' Kalki 2898 AD release date

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான “மகாநதி” படத்தை இயக்கியவர் இயக்குனர் நாக் அஸ்வின். தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் “கல்கி 2898 AD”. இந்த படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது. மேலும் இந்த படத்தில் நடிகர் கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக உருவாகும் கல்கி படத்தின் முதல் பாகத்தில் கமல் ஹாசன் சமந்தப்பட்ட காட்சிகள் சில மணி நேரம் மட்டுமே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கமல் ஹாசன் கல்கி படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது கல்கி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 9 ஆம் தேதி கல்கி 2898 AD படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2898 காலகட்டத்தில் நடக்கும் ஒரு வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக கல்கி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், எதிர்பார்த்த பிரம்மாண்ட வெற்றி கிடைக்கவில்லை. சலார் தவறவிட்ட அந்த பிரம்மாண்ட வெற்றியை, பிரபாஸுக்கு கல்கி படம் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kalki 2898 AD Grand Release on June 27, 2024 | Prabhas, Amitabh, Kamal Haasan, Deepika | Nag Ashwin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

“நமது வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு வெளியேறிவிட்டார்கள்” : அதிமுகவை மறைமுகமாக தாக்கிய அண்ணாமலை

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share