ஆறு நாட்களில் ரூ.700 கோடி வசூலை கடந்த ‘கல்கி 2898 AD’

Published On:

| By christopher

Kalki 2898 AD one week Box Office Collection

பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான படம் ‘கல்கி 2898 AD’.

இப்படத்தில், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், திஷா பதானி, அன்னா பென், சோபனா என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் கடந்த ஜூன் 27 அன்று, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட்டது.

இந்து மதத்தின் இதிகாசங்களின் அடிப்படையில், 2898-ஆம் ஆண்டில் ஏற்படும் நிகழ்வுகளை கதைக்களமாக கொண்டு, இந்த ‘கல்கி 2898 AD’ திரைப்படம் ஒரு சயின்ஸ்-பிக்சன் திரைப்படமாக தயாராகியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

ஹாலிவுட் தரத்தில் மிக பிரம்மாணடமாக தயாராகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். இதன் காரணமாக, வெளியான முதல் நாளிலேயே ரூ.191.5 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இப்படம், முதல் 4 நாட்களில் ரூ.555 கோடி வசூலை கடந்து வரலாறு படைத்தது. குறிப்பாக, இந்த முதல் 4 நாட்களில் இப்படம் இந்தியில் மட்டும் ரூ.115 கோடி வசூலை கடந்து அசத்தியிருந்தது.

இந்நிலையில், 6 நாட்களில் இப்படம் ரூ.700 கோடி வசூலை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

Kalki 2898 AD Box Office Collection

மேலும், ரசிகர்களிடம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் உச்சத்தில் உள்ள நிலையில், ‘கல்கி 2898 AD’ திரைப்படம் விரைவில் ரூ.1,000 கோடி வசூலை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படம் இந்திய சினிமாவில் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த டங்கல், பாகுபலி-2 உள்ளிட்ட படங்களில் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு மீது தீர்ப்பு முதல் இந்திய அணி வீரர்கள் பேரணி வரை!

கிச்சன் கீர்த்தனா : இறால் தொக்கு தோசை

போலியோ தடுப்பில், உலக சுகாதார அமைப்பு.

“மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்”: டேவிட் மில்லர் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share