prabhas fans celebrate his birthday

சலார் எமோஜி… 230 அடி கட் அவுட்: பிரபாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்!

சினிமா

ரிபல் ஸ்டார் என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் பிரபாஸ், பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமானார்.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸின் படங்கள் அனைத்துமே அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை பாகுபலி தந்த வெற்றியை பிரபாஸுக்கு வேறு எந்த படங்களும் பெற்றுத் தரவில்லை.

தற்போது கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் சலார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், மலையாள நடிகர் ப்ரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கேஜிஎஃப் படத்தின் வெற்றியை போலவே சலார் படமும் பிரம்மாண்ட வெற்றியடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்நிலையில் இன்று அக்டோபர் 23ஆம் தேதி நடிகர் பிரபாஸின் 44வது பிறந்தநாளை முன்னிட்டு சலார்  படக்குழுவினர் பிரபாஸின் புதிய போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சலார் படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதால்,  பட ப்ரோமோஷனுக்காகவும் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் நடிகர் பிரபாஸின் சலார் படத்தின் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் #prabhas, #SalaarCeaseFireOnDec22, #Salaar, #SalaarCeaseFire, #SalaarComingBloodySoon போன்ற சில ஹாஷ்டேக்குகளை பதிவு செய்தால் சலார் எமோஜி இடம் பெறும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒருபுறம் எமோஜிகள் மூலம் பட ப்ரோமோஷன்களில் படக்குழு மாஸ் காட்ட, மற்றொருபுறம் பிரபாஸ் ரசிகர்கள் பிரபாஸ் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சுமார் 230 அடி உயர சலார் படத்தின் கட் அவுட்டை ஹைதராபாத்தில் உள்ள குக்காட்பள்ளியில் வைத்துள்ளனர்.

அங்கு நேற்று இரவு முதல் வானவேடிக்கைகள், மேளதாளங்கள் என பிரபாஸின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

பிரபாஸின் சினிமா கேரியரில் பாகுபலி படத்தில் நிகழ்ந்த மேஜிக் மீண்டும் சலார் படத்திலும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திக் ராஜா

நான்கு நாட்களில் ரூ.400 கோடி… பாக்ஸ் ஆபிஸில் ‘லியோ’ சாதனை!

நானி 31 பட டைட்டில் வெளியானது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *