இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான அனிமல் படம் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அடுத்ததாக இயக்குநர் சந்தீப் ரெட்டி, நடிகர் பிரபாஸின் 25 வது படத்தை இயக்க உள்ளார் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. பிரபாஸின் 25 வது படத்திற்கு “ஸ்பிரிட்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898 AD படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. வரும் மே மாதம் கல்கி திரைப்படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் மாருதி இயக்கத்தில் “ராஜா சாப்” என்ற படத்தின் பிரபாஸ் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தான் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர் சந்தீப் ரெட்டி, “ஸ்பிரிட் படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. முதல் நாளிலேயே ஸ்பிரிட் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்யும். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 60% ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து விட்டது. டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பிரிட் திரைப்படம் குறித்த சந்தீப் ரெட்டி கொடுத்த இந்த அப்டேட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தலைவர் 171 : ரஜினிக்கு ஜோடி இவங்களா?
பியூட்டி டிப்ஸ்: முன்னந்தலையில் முடி கொட்டாமல் இருக்க…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு