இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து விஷாலின் 33வது திரைப்படத்தை த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என பெயரிடப்பட்டுள்ளது.
விஷாலுக்கு ஜோடியாக ரிது வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கும் இத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்..
இந்நிலையில் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 29) காலை 11 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இதனை ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டும் கொண்டாடி வருகின்றனர்.
