‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘போர் தொழில்’. கிரைம் திரில்லராக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் சுமார் 5௦ கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது. படம் வெளியாகி பத்து மாதங்கள் கடந்த நிலையில், தற்போது அவரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி மீண்டும் ஒருமுறை விக்னேஷ் ராஜா – அசோக் செல்வன் இணைகின்றனர். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் அங்கும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனால் அவரின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒலிம்பிக் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதுகிறது இந்தியா
INDvsENG : சுழலில் சிதறிய இங்கிலாந்து : குல்தீப், அஸ்வின் சாதனை!