டேவிட், சோலோ போன்ற படங்களை இயக்கியவர் பிஜோய் நம்பியார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “போர்”. இந்த படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் தமிழ் பதிப்பில் அர்ஜுன் தாஸும், காளிதாஸும் இணைந்து நடித்துள்ளனர். போர் படத்தின் இந்திப் பதிப்பில், ஹர்ஷ்வர்தன் ராணே, எஹான் பட் இணைந்து நடித்துள்ளனர். டீ – சீரிஸ் மற்றும் கேட் அவே பிக்சர்ஸ் புரொடக்ஷன் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது போர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவர்களாக இருக்கும் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி தாஸ் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட மோதல், எப்படி ஒரு கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய போராக மாறுகிறது என்பதே இந்த படத்தின் ஒன் லைன்.
முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள போர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வாய் துர்நாற்றம்: நிரந்தரத் தீர்வு உண்டா?
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்!
இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3