Srinidhi Shetty replaced her manager

பட வாய்ப்பு அமையவில்லை: மேலாளரை மாற்றும் பிளாக்பஸ்டர் பட நடிகை!

சினிமா

நடித்த கேஜிஎஃப் முதல்படமே மாபெரும் வெற்றி, அதற்கடுத்து வந்த அதன் இரண்டாம்பாகம் அதனினும் பெரியவெற்றி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி. அவர் நடித்த படங்கள் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2. இப்படங்கள் படப்பிடிப்பில் இருக்கும்போதே தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திலும் நடித்தார். Srinidhi Shetty replaced her manager

கேஜிஎஃப் 2 வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் அப்படத்தின் நாயகிக்கு அடுத்தடுத்து படங்கள் அமையவில்லை. மிக அண்மையில்தான், கன்னடம் மற்றும் தமிழில் தயாராகவிருக்கும் புதியபடத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

தமிழ் திரைப்பட இயக்குநர் சேரன் இயக்கத்தில் நாயகனாக கிச்சா சுதீப் நடிக்க உள்ளார். இதுதவிர தெலுங்கில் ஒரு புதியபடத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

கேஜிஎஃப் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு அவருக்கு ஏன் படங்கள் அமையவில்லை என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் விவாதத்திற்குரியதாக இருந்து வருகிறது.

காரணம் என்னவென்று விசாரித்தால், மொழி, தமிழ் சினிமா பற்றி முழுமையாக தெரியாத புதுமுகங்கள் தமிழ் படங்களில் நடிக்க வருகிறபோது அவர்களை PRO, கால்ஷீட் மேனேஜர் என ஒரு கூட்டம் வட்டமிடும்.

இயக்குநர் அல்லது கதாநாயகன் ஆலோசனையில் pro, கால்ஷீட் மேனேஜர்களை பணியில் அமர்த்திக்கொள்வது புதுமுகங்களின் வாடிக்கை.

ஏற்கனவே பிரபலமானவர்களுக்கு பணியாற்றுபவர்கள் தான் இவர்களின் முதல் தேர்வாக இருக்கும்.

அப்படித்தான் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் உங்களுக்கு நான் மேலாளராக இருக்கிறேன், பெரியபடங்களைப் பிடித்துத் தருகிறேன் என்று சொல்லி அணுகியிருக்கிறார் ஒரு பெரியநடிகரின் மேலாளர்.

அவர் இருந்தால் நமக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி பெரிய நடிகரின் மேலாளரே தன்னுடைய தேதிகளையும் பார்ப்பதற்கு ஒப்புக்கொண்டாராம் ஸ்ரீநிதி ஷெட்டி.

ஆனால், அதன்பின் ஒருபடம் கூட ஒப்பந்தம் ஆகவில்லை. அவரை யாரும் தேடவில்லையா? என்றால் இல்லை. நிறையப் பேர் தங்கள் படங்களில் நடிக்கக்கேட்டு அணுகி இருக்கிறார்கள்.

ஆனால் நடிகையின் கால்ஷீட் மேனேஜர் சொன்ன சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அண்மையில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதியபடத்தில் அவரை நாயகியாக்க எண்ணி அணுகியிருக்கிறார்கள்.

அந்தப்படத்துக்காக ஸ்ரீநிதி ஷெட்டிக்கு சொல்லப்பட்ட சம்பளம் ஒருகோடியே இருபது இலட்சம் மற்றும் அதற்கான ஜிஎஸ்டி. இதைக் கேட்டதும் ஸ்ரீநிதி ஷெட்டி வேண்டாம் என்கிற முடிவுக்குப் படக்குழு வந்திருக்கிறது.

இப்படி வருகிறவர்களிடமெல்லாம் பெரிய சம்பளம் கேட்பதாலேயே அவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு அமையாமல் போனதை அறிந்து கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது மேனேஜரை மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறாராம். Srinidhi Shetty replaced her manager

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்!

ரூ.360 குறைந்த தங்கத்தின் விலை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *