நடிகை ஹனி ரோஸ் தமிழில் ‘முதல் கனவே’, ‘சிங்கம் புலி என பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் ஹனி ரோஸை தங்களது கடை திறப்பு விழாக்களுக்கு சில தொழிலதிபர்கள் அழைப்பது உண்டு. இதுபோல் அவர் கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும்போது, அவரைப் பார்ப்பதற்கும், அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுப்பதற்கும் ரசிகர்கள் கூடுகின்றனர். இந்நிலையில், கேரள தொழிலதிபர் ஒருவர், ஹனி ரோசுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஹனி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, கேரளாவைச் சேர்ந்த முக்கிய பணக்கார பிரமுகர் ஒருவர், என்னைப் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுக்கிறார். என் உடல் அமைப்பு குறித்து குறிப்பிட்டு, மிகவும் அசிங்கமான வார்த்தைகள் பேசுகிறார். எனக்கு ஒரு திறப்பு விழாவில் ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவம் காரணமாக, இனிமேல் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதைப் படித்துவிட்டு சிலர், ‘அவரது பதிவுக்கு நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே. அதை நீங்கள் ரசிக்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளனர். அதோடு, ஏராளமானவர்கள் தப்பான முறையில் கமெண்ட் செய்திருந்தனர். இதையடுத்து, ஹனிரோஸ் எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து, அதிரடி நடவடிக்கையாக கொச்சி அருகேயுள்ள கும்பளம் பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 30 பேர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்தது. இது தொடர்பாக உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அஜித்குமாருடன் என்ன பிரச்னை? முதன்முதலாக வாய் திறந்த பாலா
சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் : டெலிட் செய்து மீண்டும் போடப்பட்ட ட்விட்!