ரூபாய் 16 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு பூர்ணிமா வெளியேறி இருக்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரவிருக்கிறது. தற்போது விஷ்ணு தவிர மீதமுள்ள அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
இதற்கிடையில் பணப்பெட்டியை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து ஆசையை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தார்.
#PoornimaRavi final moments
Vibing with housemates#BiggBossTamil7 #BiggBoss7Tamil pic.twitter.com/GTkrnEqKpm
— Sekar 𝕏 (@itzSekar) January 5, 2024
இந்த நிலையில் ரூபாய் 16 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறி இருக்கிறார். பணப்பெட்டியை எடுப்பதில் மாயா, பூர்ணிமா இடையே போட்டி நிலவியது. இதில் பூர்ணிமா முந்திக்கொண்டு விட்டார்.
இறுதிப்போட்டி வரை சென்றாலும் டைட்டில் வெல்வதற்கு உத்தரவாதம் கிடையாது. எனவே தான் பணப்பெட்டியுடன் புத்திசாலித்தனமாக பூர்ணிமா வெளியேறி இருக்கிறார் என ரசிகர்களும் அவரது முடிவை பாராட்டி வருகின்றனர்.
பூர்ணிமா எடுத்துச்சென்ற பணமே, பிக்பாஸ் வரலாற்றில் அதிகபட்சமாக சூட்கேஸில் வைக்கப்பட்ட பணம் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர் இறக்கத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!