தமிழ் நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவரின் எளிமை, அமைதி, அழகு யதார்த்தமான நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். அடிப்படையில் டாக்டரன சாய் பல்லவி ஒரு தேர்ந்த டான்சரும் கூட. ‘ரவுடி பேபி…’ பாடல் டான்சே அதற்கு உதாரணமாக சொல்லலாம். இவருடைய தங்கைதான் நடிகை பூஜா கண்ணன். 2021 ஆம் ஆண்டு வெளியான சித்திரை செவ்வானம் படத்தின் ஹீரோயின்.
சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு வினீத்துடன் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது, தங்கை பூஜா கண்ணனுடன் சேர்ந்து சாய் பல்லவி மிகவும் பிரபலமான மராட்டிய பாடலான ‘அப்சரா ஆலி’ பாடலுக்கு மயக்கும் ஸ்டெப்ஸ் போட்டு நடனமாடிய வீடியோவும் வைரலானது. தொடர்ந்து, பூஜா கண்ணன் வினீத் திருமணம் உதகையில் படுகர் முறைப்படி நடந்தது.
இந்த நிலையில், வினீத் பூஜா கண்ணனுக்கு சாய் பல்லவி கம்மல் மாட்டி விடுவது போல புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் பூஜா கண்ணன் பாராம்பரிய படுகர் உடையில் இருக்கிறார். இருவரும் சிரித்தபடி எதையோ பேசிக்கொண்டிருக்கின்றனர். படத்தை பார்த்த பலரும் ‘பாசமான அக்கா’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது, சாய் பல்லவி ரன்பீர் கபூர் நடிக்கும் ‘ராமாயணம்’ படத்தில் சீதா தேவியாக நடிக்கிறார் . இதில் சன்னி தியோல் ஹனுமானாகவும், ராவணனாக யஷும் நடிக்க பாபி தியோல் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கும்பகர்ணனாகவும், விபாஷணனாகவும் நடிக்க போகின்றனர். ராமாயண திரைப்படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தனுஷுக்கு எதிராக FEFSI : நடிகர் சங்கம் கண்டனம்!
லெபனானில் பேஜரை தொடர்ந்து வெடித்த வாக்கி டாக்கிகள்… பலி எண்ணிக்கை 32ஆக உயர்வு!