‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இளம் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடித்திருந்தவர் ‘நெஜமாவே’ சந்தோஷ். இதேபோல அப்படத்தில் இளம் நந்தினியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார்.
சந்தோஷ் – சாரா இருவரின் கெமிஸ்ட்ரியும் நன்றாக இருந்ததாக, ‘பொன்னியின் செல்வன்’ படம் வந்தபோதே ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.
சமூக வலைதளங்களில் இன்னும் ஒருபடி மேலே போய், இருவரும் ஒரு முழுநீள படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது அவர்களின் கோரிக்கை நிஜமாகும் சூழல் உருவாகி இருக்கிறது.
சந்தோஷ்-சாரா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக இருக்கின்றனராம். மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவாவின் (12 B) மகள் சனா மரியம் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சுந்தர்.சி-குஷ்பூ இப்படத்தினை தயாரிக்க இருப்பதாகவும், முழுக்க காதலை மையமாக வைத்து படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு நடிகை அதிதி ஷங்கரை முக்கிய வேடமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
அநேகமாக ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைப்பார் என கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த முறையான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகிய படங்களில் சனா மரியம் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது” : செல்வ பெருந்தகை
’ரூ.1 கோடி வேண்டும்’ : ஏ.வி.ராஜூக்கு எதிராக வெங்கடாச்சலம் மனு!