கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர், பொன்னிநதி பாக்கனுமே மற்றும் சோழா சோழா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 6) தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நடைபெறும் இடத்திற்கு நடிகர், நடிகையர்கள் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் விழா நடைபெறும் இடத்திற்கு தனது மனைவி சுகாசினியுடன் வருகை தந்துள்ளார்.
நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, நாசர், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பல நடிகர் நடிகையர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வருகை தந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வருவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இருவருக்காகவும் அரங்கமே காத்திருந்தது.
இந்நிலையில் 8 மணிக்கு மேல் ரஜினிகாந்த் வருகைத் தந்தார். அவரைத் தொடர்ந்து கமல்ஹாசனும் விழா அரங்கிற்கு வருகைத் தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ட்ரெய்லர் வெளியிடப்படவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
மோனிஷா
கமல் குரலில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீடு! மற்ற பாடல்கள் என்னென்ன?