பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்தப் படத்தில் பணியாற்றிய திரைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் படத்தில் நேரடியாக, மறைமுகமாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து,
வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சிக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்க்ஷன்ஸ் சார்பில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ஏற்பாடு நிகழ்ச்சி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் லைகா நிறுவனர் சுபாஷ் கரண் அல்லி ராஜா, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்
சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா, சக நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
96 படத்துக்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் புதிய பட வாய்ப்புக்கள் இல்லாமல் தடுமாறி வந்த நடிகை த்ரிஷா,
பொன்னியின் செல்வன் பட வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ளார்.
த்ரிஷாவுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியுள்ளது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்குமார் ஜோடியாக நடிக்கவும் த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
த்ரிஷா, சமீபத்தில் வெளிநாட்டுக்கும் சுற்றுலா சென்றிருந்தார். அங்கிருந்து வந்ததும் அவரது காலில் லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் அவதிப்பட்டு வந்த த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொள்வாரா மாட்டாரா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது.
ஆனால் வலியையும் பொருட்படுத்தாமல் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட த்ரிஷா, அங்கு தன்னுடன் படத்தில் பணியாற்றியவர்களுடன் ஜாலியாக நடனமாடி மகிழ்ந்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இராமானுஜம்
“அதிமுக தலைமையில் கூட்டணியா?- எடப்பாடிக்கு அண்ணாமலை பதில்!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜர் – அரசு நிகழ்ச்சிகள்: அமைச்சர் பொன்முடியின் பலே பிளான்