பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள், ‘சோழா சோழா’ பாடல் இன்று (ஆகஸ்ட் 19) மாலை வெளியாகி உள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அதே தலைப்பில் இயக்குனர் மணிரத்னம் இரு பாகங்களாக திரைப்படமாக உருவாக்கி உள்ளார்.
அதன் முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, யூடியூபில் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இது கார்த்தியின் கதாப்பாத்திரமான வந்திய தேவனுக்கான அறிமுக பாடலாக அமைந்தது.
தற்போது ’சோழா சோழா’ என்ற பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்துள்ள இந்த பாடலையும் ‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடலை எழுதியிருந்த கவிஞர் இளங்கோ கிருஷ்ணனே எழுதியுள்ளார்.
இந்த பாடல் விக்ரம் நடித்துள்ள கதாபாத்திரமான ஆதித்த கரிகால சோழன் போர்களத்தில் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன்