சோழ மன்னர்களில் புகழ்பெற்றவரான ராஜராஜ சோழனின் கதையை, தன் அழகான மொழிநடையால் ‘பொன்னியின் செல்வன்’. நாவலாக உருவாக்கினார் எழுத்தாளர் கல்கி.
நாவல் வெளியான நாள் முதல் இன்றுவரை புத்தக சந்தைகள் மட்டுமில்லாமல் இணையத்திலும் அதிகமாக விற்பனையாகும் புத்தகப் பட்டியலில் ‘பொன்னியின் செல்வன்‘ நிச்சயம் இடம்பெறும்.
இந்த நாவலை இயக்குநர் மணிரத்னம் இரு பாகங்களாக இயக்க திட்டமிட்டு படப்பிடிப்பு முடிந்த நிலையில் முதல் பாகமானது செப்டம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் உருவான பின்பு பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களிடமும் பொன்னியின் செல்வன் நாவல் குறித்த தாக்கம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களையும் அதிகமானோர் தேடி செல்லும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.
இந்த நிலையில் சென்னையின் 383-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை தீவுத்திடலில் மிதிவண்டிகள் கண்காட்சியை சுற்றுலா துறை செயலாளர் சந்திர மோகன் மற்றும் இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய அவர், பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அழைத்து செல்லப்படும் எனவும் இதற்கு சுற்றுலா வழிகாட்டியும் (guide) உடன் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீராணம், காட்டுமன்னார்கோவில், கடம்பூர்க் கோயில்கள் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் விவரம் கூறும் கல்வெட்டு, பழையாறை, உடையாளூர், திருப்புறம்பியம், ராஜராஜன், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைகள், விஜயாலயன் புகழ் பாடும் திருப்புறம்பியம் தஞ்சை, ராஜராஜன் மெய்கீர்த்தி கல்வெட்டு, கோடியக்கரை, ஆகியவை பொன்னியின் செல்வன் நாவலில் வரும் மிக முக்கியமான இடங்களாகும்.
- க.சீனிவாசன்
பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியிடுகிறார் முதல்வர்